மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளில் மாடுகள், குதிரைகள் சர்வசாதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் சில எதிர்பாராத தருணங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது. மேலும் பொதுமக்களும் இந்த விலங்குகளால் அதிகம் பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது.
இதனையடுத்து மதுரை மாநகராட்சியில் பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. மதுரை வைகை நதியின் தென்கரைப் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக, சுற்றித்திரிந்த குதிரைகளை மாநகராட்சிப் பணியாளர்கள் பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆரப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த குதிரைகளை மாநகராட்சிப் பணியாளர்கள் பிடித்துச்செல்ல முயன்றபோது தாய்க்குதிரை ஒன்று தனது குட்டியை(கன்றினை) பிரிய மனமின்றி மாநகராட்சி வாகனத்தை மறித்து நின்றதோடு, வாகனத்தில் ஏற மறுத்து வாகனத்தின் பின்னாலேயே கிட்டத்தட்ட ஆரப்பாளையம் பகுதியிலிருந்து தத்தனேரி பாலம் செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய மாநகராட்சி கால்நடை காப்பகம் வரை வாகனத்தின் பின்னாலேயே ஓடி சென்றது காண்போரை நெகிழச் செய்தது.
இதையும் படிங்க: Video: காட்டிற்குள் விரட்ட முயன்ற வனத்துறையினரை விரட்டிய யானையின் பகீர் வீடியோ!