ETV Bharat / state

கண்ணை கூசும் விளக்குகளை பயன்படுத்தி திருட்டு! - சிசிடிவி காட்சிகள்

மதுரையில் சிசிடிவியில் சிக்காதவகையில் கண்ணை கூசும் சிறப்பு விளக்குகளைப் பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனம் திருட்டு
இருசக்கர வாகனம் திருட்டு
author img

By

Published : Jul 23, 2021, 11:40 AM IST

மதுரை: அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக, இரு தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து காவல்நிலையத்தில் தற்போது வரை வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், குமார் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் இரண்டுபேர் தலையில் தலைப்பாகை அணிந்தபடி எக்ஸ் எல் பைக்கில் வருவதும், அதன் பின்னர் இளைஞரின் வீட்டிற்குள் சென்று விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இருச்சக்கர வாகனம் திருட்டு

ஆனால் சிசிடிவி காட்சிகளில் இருந்து தப்பும் வகையில் முகத்தின் அருகிலும், வண்டியின் பதிவெண் பலகை அருகிலும் கண்களை கூசக்கூடிய விளக்குகளை பொருத்தியுள்ளனர். இதனால் வாகனத்தை திருடிச் செல்பவரின் முகம் மற்றும் வாகனத்தை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் திருட்டு சம்பவத்திற்கு சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க: கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸின் 12 சொகுசு கார்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.