மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பல போராட்டங்களுக்குப் பிறகு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2015இல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு இடம் தேர்வுசெய்யப்பட்டது.
ஆனால், அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் உறுதியளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக அமைக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் பணியை துரிதப்படுத்தவும், சமூக ஆர்வலர்களையும் அதற்கான குழுவில் இணைக்கவும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாகவே, இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு விசாரித்துவந்தது.
தற்போது, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனையும் படிங்க: சென்னையில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு