மதுரை கூடல் நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய வங்கி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய விகிதத் தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாக 2019 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. மத்திய நிதித்துறை அமைச்சகம் வங்கி ஊழியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். 7ஆவது ஊதியக் குழுவும் மத்திய நிதித்துறை அமைச்சகமே வங்கி ஊழியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
ஆனால், அதனைப் பின்பற்றாமல், அகில இந்திய வங்கி கூட்டமைப்பின் பொறுப்பாளர்களே வங்கி ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் குறித்து முடிவெடுக்கின்றனர். ஆகவே மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத் தொகையை மத்திய அரசின் சட்டப்படியும் ஏழாவது ஊதியக் குழுவின் படியும் நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், அகில இந்திய வங்கி கூட்டமைப்பின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி அதன் பேச்சுவார்த்தை முடிவுகள் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று கூறி வழக்கை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு