மதுரை: ஆடிப்பூரம் திருவிழா (ஆக.11) ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று (ஆக.9) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது, "மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 11 தடை
இதன் தொடர்ச்சியாக ஆடிப்பூரம் திருவிழாவினை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. வழக்கமான பூஜைகள் மட்டும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும்.
கரோனா முன்னெச்சரிக்கை
பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். இதர நாள்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா மூன்றாம் அலை பரவல் தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடல் பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய பொக்கிஷம் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்