மதுரை மலர் சந்தையில் பூக்களின் வரத்து பெருமளவு குறைந்ததாலும் கடும் பனிப்பொழிவின் காரணமாகவும் மதுரை மல்லியின் விலை எதிர்பாராத உச்சத்தைத் தொட்டுள்ளது.
மதுரை, மலர் சந்தை, மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் பூ உற்பத்தியாளர்களின் சரணாலயமாகும். மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பூக்கள் இங்கு அதிக அளவில் விற்பனைக்கு வரும்.![மதுரை மல்லியின் விலை கிலோ ரூ.3 ஆயிரம் - கிடுகிடுவென உயர்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-flower-price-rise-script-7208110_23122020110233_2312f_1608701553_969.png)
மதுரை மல்லி
இந்நிலையில் இன்று மதுரை மலர் சந்தைக்கு போக்குவரத்து பெருமளவு குறைந்த காரணத்தால், மதுரை மல்லி கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரளி கிலோ 300 ரூபாய், பிச்சிப்பூ 800 ரூபாய், முல்லை 1000 ரூபாய், சம்பங்கி 150 ரூபாய், செவ்வந்தி 200 ரூபாய், பட்டன் ரோஸ் 220 ரூபாய், கனகாம்பரம் 1,500 ரூபாய், மெட்ராஸ் மல்லி 800 ரூபாய் எனப் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் வரத்து மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தாலும், கடும் பனிப்பொழிவின் காரணமாகவும் அடுத்த சில நாள்களுக்கு இதே விலை நீடிக்கும் எனவும் பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.