மதுரை மாவட்டம் மேலப்பனங்காடியைச் சேர்ந்தவர் உமா சந்திரா. இவர் அந்தப் பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார். தனது கடையில் நேற்று மாலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் மளிகைப் பொருள்களை வாங்கிய பின்னர் ரூ.500 கள்ளநோட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை வாங்கியுள்ளார்.
அப்போது உமா சந்திரா அந்த ரூபாய் நோட்டைப் பார்த்தபோது கள்ளநோட்டுபோல இருந்ததால் அவரை அழைத்துள்ளார். இதையடுத்து அவர் பதில் கூறாமல் தப்பியோடியுள்ளார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட உமா சந்திரா, அவரை விரட்டிச் சென்று கையும் களவுமாகப் பிடித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு காவல் துறையினரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். காவல் துறையினர் அவரிடமிருந்து 19 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல்செய்தனர்.
இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் கள்ளநோட்டு மாற்றிய நபரை விரட்டிப் பிடித்த பெண்ணுக்கு காவல் துறையினர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரம் ரவுடி சேலத்தில் ஓட ஓட விரட்டிக் கொலை: சிசிடிவி காட்சி வெளியீடு