மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் அறங்காவலர்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். என் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் அறங்காவலர் பதவியில் இருந்து தகுதி இழந்து விட்டதாக இந்து அறநிலையத்துறை சிவகங்கை மாவட்ட இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது சட்ட விரோதமானது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், என் தரப்பின் முறையான விளக்கமும் கேட்கப்படவில்லை, போதிய கால அவகாசம் கொடுக்காமல் தகுதி இழப்பு என உத்தரவிட்டுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, அறங்காவலர் பதவியில் இருந்து என்னைத் தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முகமது சபீக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் சொக்கலிங்கத்தை தகுதி இழப்பு செய்து வெளியிட்ட உத்தரவிற்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 4 வழக்குகளில் ஜாமீன்.. சவுக்கு சங்கருக்கு ஹேப்பி நியூஸ்!