ETV Bharat / state

மதுரையில் கண்ணகி தோற்றத்தில் மனு தாக்கல் செய்த பட்டதாரிப்பெண் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருக்கு போட்டியிட கண்ணகி தோற்றத்தில் காற்சிலம்புடன் எம்பிஏ பட்டதாரி பெண் ஒருவர் வந்து, மனு தாக்கல் செய்துள்ளார்.

காற்சிலம்புடம் வேட்புமனு தாக்கல் செய்த பெண்

author img

By

Published : Feb 3, 2022, 6:23 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர், வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும், அதிகளவில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் 78ஆவது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் எம்பிஏ பட்டதாரி மதுமிதா, கண்ணகி தோற்றத்தில் கையில் காற்சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

காற்சிலம்புடன் வேட்புமனு தாக்கல் செய்த பெண்

தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் வேட்பாளர்களை நம்பி, நம்பி மக்கள் வாக்களித்து வருவதை உணர்த்தும் வகையிலும், மாற்றத்தை வேண்டியும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் வேட்பாளர் மதுமிதா தெரிவித்தார்.

இதையும் படிங்க: எலிப்பொறியுடன் மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர் - இது மதுரை சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.