ETV Bharat / state

மதுரை மல்லிகையின் 'மணம்' காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிகைப்பூவின் தரத்தையும், சிறப்பையும் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மதுரை மலர்ச்சந்தையின் தலைவர் ராமச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

madurai
madurai
author img

By

Published : Jan 6, 2021, 8:36 PM IST

தென்மாவட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மலர்ச்சந்தையாக மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தை விளங்குகிறது. இங்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட டன் பூ விற்பனைக்கு வருகின்றது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மதுரை மல்லிகை உலகப்புகழ் பெற்றதாகும். அதன் மணமும் சிறப்பும் காரணமாக உலகளாவிய சந்தை வாய்ப்பு மதுரை மல்லிக்கு உண்டு.

இது குறித்து மதுரை மலர்ச்சந்தையின் தலைவர் சோ. ராமச்சந்திரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "மதுரை என்று சொன்னாலே மீனாட்சி அம்மன் கோயிலும் மதுரை மல்லிகையும்தான் நினைவில் வந்துசெல்லும். மதுரை மல்லிகைக்கான சீசன் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் தொடங்குகிறது.

இன்றைய விலை நிலவரப்படி மதுரை மல்லிகை கிலோ ரூபாய் இரண்டாயிரத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

சீசன் தொடங்குகின்ற காரணத்தால் இனி வருகின்ற காலங்களில் மல்லிகை உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், வரத்தும் கூடுதலாக இருக்கும். மதுரை மல்லிகை விலை மிகக் கணிசமான அளவில் குறையத் தொடங்கும். நாளொன்றுக்கு 50 டன் வரை மல்லிகை வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது அரை டன் அளவே சந்தைக்கு வருகிறது.

மதுரை மல்லிகை உலகப்புகழ் பெற்று விளங்குவதற்கு காரணம் அதன் மணம்தான். வெளிநாடுகளில் மதுரை மல்லிகையை வாங்குகின்ற மக்கள், மலரும்போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக குறை சொல்கின்றனர்.

ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் கவனம் எடுத்து இதற்கான காரணத்தை ஆய்ந்தறிய வேண்டும். தற்போதைய கரோனா காலகட்டத்தில் மல்லிகை சாகுபடியில் இருந்து நிறைய விவசாயிகள் வெளியேறிவிட்டார்கள்.

மதுரை மல்லிகையின் 'மணம்' காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்

ஆகையால் தமிழ்நாடு அரசு இதற்கும் முயற்சி மேற்கொண்டு அந்த விவசாயிகளுக்கு உரிய வழிவகை செய்து கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க: ஆண்டவன் சொத்தை யார் ஏமாற்றினாலும் பதில் சொல்ல வேண்டும் - ராதாகிருஷ்ணன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.