கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு அடுத்த மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தவை பிறப்பித்துள்ளது. இதனால், பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்ற மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு களமிறங்கியுள்ளது.
இதுகுறித்து அதன் செயலாளர் ஹபிபுல்லா கூறுகையில், ”இன்று காலை முதல் மதுரை மாநகர் மட்டுமன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எங்களது அமைப்பினைச் சார்ந்த இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அனைவருக்கும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் இலவசமாக வழங்கிவருகிறோம்.
நெல்பேட்டை, தெற்குவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப்பணிகளை மேற்கொண்டுவருகிறோம். ஊரடங்கு நிறைவடையும்வரை, எங்களின் இந்தச் சேவை தொடரும்” என்றார்.
இதையும் படிங்க: இறுதித் தேர்வை 34 ஆயிரம் பேர் எழுதவில்லை... இதுதான் காரணமா?