ETV Bharat / state

தோல் வங்கி தொடங்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு - etv bharat

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு பதிலளிக்க உத்தரவு
அரசு பதிலளிக்க உத்தரவு
author img

By

Published : Aug 2, 2021, 4:50 PM IST

மதுரை: மகாளிப்பட்டியை சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "2016-ஆம் ஆண்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தீ காயத்திற்கு என்று தனி பிரிவு மற்றும் தோல் சேமிப்பு வங்கியுடன் சேர்ந்து உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அதன்படி 60 விழுக்காடு பண உதவி மத்திய அரசும் 40 விழுக்காடு பண உதவி மாநில அரசும் என தீக்காய தனிப்பிரிவு மற்றும் தோல் வங்கி அமைப்பதற்கு ரூ.6.579 கோடி நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக டிசம்பர் 2020 ஆண்டு மத்திய அரசு 2.079 கோடியும் மாநில அரசு 1.386 கோடியும் ஒதுக்கீடு செய்தது.

இந்தியாவில் 70 லட்சம் பேர் தீக் காயங்களால் பாதிப்படைந்துள்ளனர். தீ காயங்கள் ஏற்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த தோல் உதவுகின்றது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தோல் சேகரிப்பு வங்கிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டரை வருடங்களாகியும் இந்த துறை தற்போது வரை உருவாக்கப்படவில்லை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையை போல் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரியல் மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலமே தோல், எலும்பு, இதயம், ரத்தம் ஆகியவை சேகரித்து முறையாக பாதுகாக்க முடியும்.

இது குறித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே, மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரியல் மையத்தை அமைக்க வேண்டும். மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தீ தனிப்பிரிவுடன் தோல் வங்கி நவீன வசதிகளுடன் தொடங்க கால நிர்ணயம் செய்ய உரிய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு இவ்வழக்கு குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நகரப் பேருந்துகளில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.