ETV Bharat / state

மீனாட்சி திருக்கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா: மதுரை கோலாகலம் - கோலாகலம் பூண்ட மதுரை

மதுரை :  உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு  நடைபெற்ற தெப்பத் திருவிழாவில்  பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Thaipoosam Catamaran Festival at Madurai Meenakshi Temple
கோலாகலம் பூண்ட மதுரை - மீனாட்சி திருக்கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா!
author img

By

Published : Feb 8, 2020, 8:32 PM IST

மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அவ்விழாவின் 12ஆம் நாளான இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்

Thaipoosam Catamaran Festival at Madurai Meenakshi Temple
கோலாகலம் பூண்ட மதுரை - மீனாட்சி திருக்கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா!

இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பாடாகி தெப்பக்குளம் அருகில் இருக்கும் மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலை வந்தடைந்தனர். பிறகு அங்கிருந்து தெப்ப உற்சவம் நடைபெறும் திருக்குளத்தில் அமைந்துள்ள இடத்திற்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதுகுறித்து மீனாட்சி கோயில் பட்டர் காலா‌ ஸ்ரிநாதன் கூறுகையில், ’இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய தெப்பத் திருவிழா பகல் இரண்டு முறையும் இரவு ஒரு முறையும் என மூன்று முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருக்குளத்திற்குள் வலம் வரும். பிறகு இரவு புறப்பாடாகி மீண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வார்’ என்றார்.

காலை 11 மணி அளவில் தெப்பத்தை வடம் பிடித்து இழுக்கும் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் அக்னிவீரன் மற்றும் அப்பகுதி இளைஞர்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. வெப்பத்திற்கு உள்ளும் வெளியிலும் மொத்தம் 150 பேர் வடம் இழுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பகல் நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இரவில் ஏறக்குறைய 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு பனையூர் கால்வாய் வழியாக இயற்கையாக நீர்வரத்து ஏற்பட்டு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு நீர் முழு கொள்ளளவை எட்டியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் நேற்று நடைபெற்றது.

இதையும் படிங்க: “ஆயிரம் வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்” - செந்தில் பாலாஜி

Intro:மதுரையில் தைப்பூசத் தெப்பத் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
Body:மதுரையில் தைப்பூசத் தெப்பத் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. அவ்விழாவின் 12 ஆம் நாளான இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி-சுந்தரேஸ்வரர் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பாடாகி தெப்பக்குளம் அருகில் இருக்கும் மரகதவல்லி முக்தீஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர். பிறகு அங்கிருந்து தெப்ப உற்சவம் நடைபெறும் திருக்குளத்தில் அமைந்துள்ள இடத்திற்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சகிதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதுகுறித்து மீனாட்சி கோயில் பட்டர் காலா‌ ஸ்ரிநாதன் கூறுகையில், இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் தெப்பத் திருவிழா பகல் இரண்டு முறையும் இரவு ஒரு முறையும் என மூன்று முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருக்குளத்திற்குள் வலம் வரும். பிறகு இரவு புறப்பாடாகி மீண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோவிலில் எழுந்தருள்வார் என்றார்.

காலை 11 மணி அளவில் வெப்பத்தை வடம் பிடித்து இழுக்கும் அனுப்பானடி பகுதியைச் சார்ந்த அக்னிவீரன் மற்றும் அப்பகுதி இளைஞர்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. வெப்பத்திற்கு உள்ளும் வெளியிலும் மொத்தம் 150 பேர் வடம் இழுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பகல் நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இரவில் சற்று ஏறக்குறைய 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.