ஜம்மு காஷ்மீர்: ரஜோரி மாவட்டம் ''பார்கல்'' என்ற இடத்தில் பாதுகாப்புப்படையினர் ராணுவ முகாம் அமைத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் சிலர் வேலியைத் தாண்டி ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த 1 ராணுவ வீரர் உட்பட 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அவர்கள் விவரம் வருமாறு:
சப்: ராஜேந்திர பிரசாத், மாலிகோவன், ஜுன்ஜுனு (ராஜஸ்தான்)
ரைபிள்மேன்: லட்சுமணன், டி.புதுப்பட்டி, தும்மக்குண்டு, மதுரை (தமிழ்நாடு)
ரைபிள்மேன்: மனோஜ் குமார், ஷாஜஹான்பூர், ஃபரிதாபாத் (ஹரியானா)
ஆகிய மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தானாமண்டி பகுதியில் கூடுதலாக வீரர்கள் குவிக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு