ETV Bharat / state

மதுரையில் பயங்கர தீ விபத்து

author img

By

Published : Jun 10, 2022, 10:48 PM IST

மதுரையில் பழைய இரும்பு குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மதுரையில் பயங்கர தீ விபத்து
மதுரையில் பயங்கர தீ விபத்து

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அண்ணா முக்கிய வீதியில் மகாலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு சாமான்கள் சேமிப்புக்குடோனில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை டவுன் தீயணைப்புப்படை வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புப் பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தீயினைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொளுந்துவிட்டு எரிந்து வந்ததால், தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்தது. பின், மதுரை மாநகராட்சி மூலம் தண்ணீர் லாரி கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வந்து ஆய்வு செய்தார்.

மதுரையில் பயங்கர தீ விபத்து

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகனின் பள்ளிக் கட்டணத்தை வைத்து கணவர் சூதாட்டம்:மனமுடைந்து மனைவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.