ETV Bharat / state

தற்காலிக போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய விவகாரம்.. அதிகாரிகளை கண்டித்த நீதிபதி! - Madurai bench of MHC

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களின் ஊதிய பிரச்னை குறித்த மனு மீதான விசாரணையில், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும் என மதுரைக் கிளை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:40 PM IST

மதுரை: வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்த கனகசுந்தர் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 01.04.2014 முதல் 31.01.2017 வரை செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகையை தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விடக் குறைவான ஊதியத்தை வழங்கி வருகின்றனர். இதுசம்மந்தமாக, கடந்த 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 2017ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தாத காரணத்தால், 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், 2019ஆம் ஆண்டு நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும், 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதிய நிலுவைத்தொகை வழங்கவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று (செப்.22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆறுமுகம், பொதுமேலாளர் இளங்கோவன் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ராஜேஸ்வரன் மற்றும் முருகேசன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அதில் நீதிபதி, “2016ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தற்போதுவரை நிறைவேற்றவில்லை என தெரியவந்துள்ளது. தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை.

செய்த பணிக்கு உரிய ஊதியத்தை மட்டுமே கேட்கின்றனர். அரசு நிரந்தர ஊழியர்களும், தற்காலிக ஊழியர்களும் பேருந்துகளை இயக்கினால் மட்டும் தான் பேருந்துகள் இயங்கும். தற்காலிக பேருந்து ஓட்டுநர்களுக்கும், நிரந்தர பேருந்து ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்குவதில் ஏதாவது வேறுபாடு உள்ளதா?

இரு தரப்பு பணியாளர்களும் பொதுவாக மக்களுக்காக தான் பணியாற்றுகிறார்கள். ஆனால் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. எல்லா பணியாளர்களும் ஒரே மாதிரி தான் பேருந்துகளை இயக்குகின்றனர். பணியை முறையாக செய்த ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல.

பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க நிதி பற்றாக்குறையை காரணமாக கூறுவதா? நிதி இல்லையென்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே? நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள். நீதிமன்றத்திற்கு சக்தி இல்லை என கருதாதீர்கள். நீதிக்காக நீதிமன்றங்கள் எப்போதும் தொடர்ந்து இயங்கும். விடுமுறை நாட்களிலும் கூட நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குக்காக நடைபெறுகிறது.

அதை போலத் தான் போக்குவரத்து துறையில் பேருந்துகளை எல்லா நாட்களிலும் மக்களுக்காக ஊழியர்கள் இயக்குகிறார்கள். அவர்களுக்கு ஊதியத்தை தாமதிப்பது, வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல. நீதிமன்ற உத்தரவை நினைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும்.

நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, அதனை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றும் விதத்தில் தான் உள்ளது” என குறிப்பிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் பண மோசடி.. பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.