ETV Bharat / state

'மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்..’ - அரசு மருத்துவர்கள் சங்கம் - தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம்

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்
author img

By

Published : Nov 19, 2022, 7:30 PM IST

மதுரை: கால்பந்து வீராங்கனை உரிழந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ்நாடு அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதல் மற்றும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில், பொதுவாக அந்த துறையின் மூத்த சிறப்பு மருத்துவர்களின் கருத்துக்களை காவல்துறை பெற வேண்டும்.

அவ்வாறு மூத்த சிறப்பு மருத்துவர், அக்குறிப்பிட்ட மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்றும், அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் மருத்துவர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழ்நாடு காவல்துறை குற்ற வழக்கில் மருத்துவர்களை சேர்த்து அவர்களை தனி படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல, முன்ஜாமின் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் மருத்துவரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல வெளியிட வேண்டாம் என்றும் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது.

நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும், அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். காவல்துறை நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது.

எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும், அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை சிறுமி மரணம்.. பொங்கி எழுந்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.