சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நீட் தேர்வு முறைகேட்டை தமிழ்நாடு அரசுதான் கண்டுபிடித்துள்ளது. அதை குறை கூறாமல் பாராட்ட வேண்டும். அதேபோல் மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு நடக்கிறதா என தெரியவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என்றார்.
தொடர்ந்து பல்கலைகழகங்களில் பகவத் கீதை தத்துவியல் பாடமாக சேர்க்கப்பட உள்ளது குறித்த கேள்விக்கு, எதையுமே மேலோட்டமாக பார்த்து பதிலளிக்க முடியாது என்றார். மேலும், பேசிய அவர் இடைத்தேர்தல் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் அவரது நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். அனைத்துக் கட்சி தலைவர்களையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் அழைத்து பேசியுள்ளனர் என்றார்.