ETV Bharat / state

வார்டு மறுவரையரை குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு

மதுரை: மாநகராட்சியில் வார்டு மறு வரையரை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai Corporation Election Announcement
Madurai Corporation Election Announcement
author img

By

Published : Jan 10, 2020, 10:17 AM IST

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநாகராட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அடுத்ததாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது . ஆனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்றான, மதுரை மாநகராட்சியில் நான்கு மண்டலமாக 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. உரிய விதிகளை பின்பற்றி வார்டு மறுவரையறை செய்யவில்லை.

மேலும், தமிழ்நாடு மறுவரையறை சட்டம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி வரையறை ஒழுங்குமுறை சட்டம் 2017 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்யவில்லை. வரையறை செய்யும் பொழுது ஒரு வார்டில் மறு வரையரை செய்த பிறகு வரையறைக்கு முன்னதாக இருந்த வாக்காளர்களில் 10 சதவிகிதத்திற்கும் மேல் மக்கள் தொகை அதிகமாக இருக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது.

ஆனால் மதுரை மாநகராட்சியில் அவ்வாறு இல்லை. ஒவ்வொரு வார்டிலும் ஒரே சராசரியான வாக்காளர்களை கொண்டு பிரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒரு வார்டில், மிக அதிக வாக்காளர்களும் , ஒரு வார்டில் மிக குறைந்த வாக்காளர்களும் என வேறுபாடுள்ளது. உதாரணமாக, ஒரு வார்டில் 12, 875 வாக்காளர்களும், ஒரு வார்டில் 7,215 வாக்காளர்களும் உள்ளனர். அதிகபட்சமாக 100ஆவது வார்டில் 19, 818 வாக்காளர்கள் உள்ளனர். எனவே புதிய விதிமுறையைப் பின்பற்றி இந்த வார்டு வரையறை செய்யவில்லை. ஆளும் கட்சியினுடைய அமைச்சர் தொகுதியில் வரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.

உதாரணமாக மதுரையில் மதுரை வடக்கு தொகுதியில், வரையரைக்கு முன்பு 18 வார்டுகள் இருந்தன. தற்போது 20 வார்டுகள் உள்ளன. மறு வரையறைக்கு பின் 2 வார்டுகள் அதிகமாகியுள்ளன மதுரை மத்திய தொகுதியில் வார்டு மறுவரையறை முன்பு 22 வார்டுகள் இருந்தன. ஆனால் தற்போது 16 வார்டுகளே உள்ளன. இதில் 6 வார்டுகள் குறைக்கப்பட்டுள்ளன.

எனவே, மதுரை மாநகராட்சியில் வார்டு மறு வரையரை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் அதுவரை மாநாகராட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து, வார்டு மறு வரையறை குழுவின் தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, வருகின்ற 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா - மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி

Intro:மதுரை மாநகராட்சியில் வார்டு மறு வரையரை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.Body:மதுரை மாநகராட்சியில் வார்டு மறு வரையரை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

வரையரை செய்யும் வரையில் மாநாகராட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க கோரிய மனு.

தமிழக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 29 ம் தேதி ஒத்தி வைத்து உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.

மதுரை மத்திய. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாக ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் ,
தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது.

அடுத்ததாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது .
ஆனால், தமிழகத்தின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்றான, மதுரை மாநகராட்சியில் நான்கு மண்டலமாக 100 வார்டுகள் உள்ளன . இந்த வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. உரிய விதிகளை பின்பற்றி வார்டு மறுவரையறை செய்ய வில்லை.

தமிழ்நாடு மறுவரையறை சட்டம் மற்றும் தமிழக உள்ளாட்சி வரையறை ஒழுங்குமுறை சட்டம் 2017 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்யவில்லை .

வரையறை செய்யும் பொழுது ஒரு வார்டில் ,மறு வரையரை செய்த பிறகு, வரையறைக்கு முன்னதாக இருந்த வாக்காளர்களில் 10 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தொகை அதிகமாக இருக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது.

ஆனால் மதுரை மாநகராட்சி யில் அவ்வாறு இல்லை. ஒவ்வொரு வார்டிலும் ஒரே சராசரியான வாக்காளர்களை கொண்டு பிரிக்கப்பட பட வில்லை.
அதற்கு மாறாக ஒரு வார்டில், மிக அதிக வாக்காளர்க ளும் , ஒரு வார்டில் மிக குறைந்த வாக்காளர்களும், என வேறு பாடு உள்ளது ..உதாரணமாக. ஒரு வார்டில் 12, 875 வாக்காளர்களும், ஒரு வார்டில் 7,215 வாக்காளர்களும் உள்ளனர். அதிக பட்சமாக 100 வது வார்டில் 19, 818 வாக்காளர்கள் உள்ளனர்.

எனவே புதிய விதிமுறையை பின்பற்றி இந்த வார்டு வரையறை செய்யவில்லை. ஆளும் கட்சியினுடைய அமைச்சர் தொகுதியில் வரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.

உதாரணமாக மதுரையில் மதுரை வடக்கு தொகுதியில், வரையரைக்கு முன்பு 18 வார்டுகள் இருந்தன .தற்போது 20 வார்டு கள் உள்ளன. மறு வரையறைக்கு பின் 2 வார்டுகள் அதிகமாகி உள்ளன
மதுரை மத்திய தொகுதியில் வார்டு மறுவரையறை முன்பு 22. வார்டுகள் இருந்தன . தற்போது 16 வார்டுகள் உள்ளன .6-வார்டு குறைக்கப்பட்டுள்ளன.

உரிய விதிமுறைப்படி , வார்டு மறு வரையறை பின்பற்ற வேண்டும் .
ஆனல் மதுரை மாநகராட்சி யில் வார்டுகள் மறுவரையறை மேற்கொள்ள வில்லை.

எனவே, மதுரை மாநகராட்சியில் வார்டு மறு வரையரை முறையாக மேற்கொண்ட பிறகு, மதுரை மாநாகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் அது வரை மாநாகராட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும்.
என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து, வார்டு மறு வரையறை குழுவின் தலைவர் , மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, வருகிற 29 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.