ETV Bharat / state

ஊழியர்களிடம் இந்தியைத் திணிக்கும் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம்: பெ.மணியரசன் காட்டமான அறிக்கை! - இந்தி நுாலக திட்டம்

மதுரை: தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ள 'புத்தகத்துடன் ஒரு செல்ஃபி' திட்டம் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என்றும், இந்தி நூலகத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்தேசியப் பேரியக்கம்  பெ மணியரசன் அறிக்கை  வெளியாரை வெளியேற்றுவோம் மணியரசன்  தென்னக ரயில்வே மதுரைக் கோட்டம்  pe maniyarasan  பெ மணியரசன் அறிக்கை  tamil desiya periyakkam  tamil desiya periyakkam maniyarasan  hindi library in madurai railway junction  இந்தி நுாலக திட்டம்
ஊழியர்களிடம் இந்தியை திணிக்கும் தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம்: பெ.மணியரசன் காட்டமான அறிக்கை
author img

By

Published : Jan 1, 2020, 7:39 PM IST

நெல்லை ரயில் நிலையத்தில், மதுரை கோட்ட இந்தி மொழி அதிகாரி சீனிவாசன் பங்கேற்ற விழாவில், 'புத்தகத்துடன் ஒரு செல்ஃபி' என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தில் 10 இந்தி நூலகங்கள் உள்ளன. இத்திட்டத்தின்படி நூலகங்களை நோக்கி தொழிலாளர்களை வர செய்வதற்காகவும் தொழிலாளர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் “புத்தகத்துடன் ஒரு செல்ஃபி” என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.

தொழிலாளர்கள் ஏதாவது ஒரு நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து செல்ஃபி எடுத்து மதுரை கோட்ட இந்தி அதிகாரியின் செல்பேசி எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தொழிலாளி அதிகமாக புத்தகத்தோடு செல்ஃபி எடுத்து அனுப்புகிறாரோ, அவருக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வீ .ஆர். லெனின், மார்ச் மாத இறுதியில் பரிசுகள் வழங்குவார். இதில், கலந்து கொள்பவர்கள் ஒரு நாளில் ஒரு செல்ஃபிதான் அனுப்ப முடியும் என்பது நிபந்தனை.

இது இந்தி மொழியை மறைமுகமாக தொழிலாளர்களிடம் திணிக்கும் முயற்சிதான் என்று பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில், நூலகங்களுக்கு தொழிலாளர்கள் வருவதேயில்லை என்ற நிலையை மாற்றவும், வாசிப்பினை ஊக்குவிக்கவும் இந்தி நூல்கள் மட்டுமன்றி, தொழிலாளர்கள் வாசிக்க விரும்பும் ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற பிற மொழி நூல்களோடும் செல்ஃபி எடுத்து அனுப்பலாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஊழியர்களிடம் இந்தியை திணிக்கும் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம்: பெ.மணியரசன் காட்டமான அறிக்கை

மேலும், மதுரை கோட்டத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3.30 மணி வரை திறந்துள்ள இந்தி நூலகத்தில் பிற மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக யாரும் அதனைப் பயன்படுத்துவதில்லை. அதனைத் தவிர்ப்பதற்காகவே இத்திட்டத்தை அறிவித்துள்ளோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'இந்தி நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ் உள்ளிட்ட பிறமொழி நூல்களையும் அங்கே வைத்து, 'இனிப்பு' காட்டி ஈர்க்கும் உத்திதான் இது! நூலுடன் செல்ஃபி அதிகமாக எடுத்துக் கொண்டவர்களுக்கு பரிசு என்று சொல்வதிலும், காலப்போக்கில் அல்லது இப்போதேகூட இந்தி புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வோர்க்கு மட்டுமே பரிசு வழங்கப்படும் என்ற அச்சம் உள்ளது.

ஏனெனில், இதை அறிவித்த அதிகாரியின் பதவி பெயர் இந்தி மொழியை பரப்பும் அதிகாரி. தமிழ் மொழி நூல் அதிகம் படித்தால், இந்தி பரப்பும் அதிகாரி பரிசு தருவாரா? இந்தி நூலகத்திற்குத் தமிழர்களை ஈர்ப்பதற்காக இவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்வண்டி நிலையங்களில் இந்தித் திணிப்பு தீவிரமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்தி பேசுவோரையே அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் அமர்த்தி உள்ளார்கள். பயணச்சீட்டு முன்பதிவுப் படிவத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அச்சிட்டு பயணிகளுக்குப் பலமுறை கொடுத்துள்ளார்கள். அப்படிவத்தில் தமிழ் மொழி இல்லாதது குறித்து தமிழர்கள் பலமுறை கண்டனங்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

மதுரை கோட்டத் தலைமையக அலுவலகத்தில், நிர்வாக அதிகாரிகளின் பதவிப் பட்டியல் பெயர்ப்பலகை உள்ளது. அதில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியுள்ளார்கள். தமிழ் இல்லை. மதுரை கோட்டத்தில் செயல்படும் இந்தி நூலகங்கள் பற்றிய செய்தி மட்டுமே இப்பொழுது வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள் இருக்கின்றன.

தென்னகத் தொடர்வண்டித்துறையின் இம்முயற்சியைக் கண்டிப்பதோடு, இந்தி நூலகத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இதற்காக தமிழ்நாடு அரசு தொடர்வண்டித்துறையை வலியுறுத்தி இந்தித் திணிப்பைத் தடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்

இதையும் படிங்க: நெல்லை கண்ணனை கண்டித்து பாஜகவினர் போராட்டம்: ஹெச்.ராஜா கைது

Intro:ஊழியர்களிடம் இந்தியை திணிக்கிறதா தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம்? - இந்தி நூலக அறிவிப்பால் கிளம்பிய சர்ச்சை

தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் தனது ஊழியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துகிற சாக்கில் இந்தி மொழியைத் திணிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:ஊழியர்களிடம் இந்தியை திணிக்கிறதா தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம்? - இந்தி நூலக அறிவிப்பால் கிளம்பிய சர்ச்சை

தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் தனது ஊழியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துகிற சாக்கில் இந்தி மொழியைத் திணிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை ரயில் நிலையத்தில், மதுரைக் கோட்ட இந்தி மொழி அதிகாரி சீனிவாசன் பங்கேற்ற விழாவில், 'புத்தகத்துடன் ஒரு செல்ஃபி' என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரைக் கோட்டத்தில் 10 இந்தி நூலகங்கள் உள்ளன. இத்திட்டத்தின்படி நூலகங்களை நோக்கி தொழிலாளர்களை வர செய்வதற்காகவும் தொழிலாளர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் “புத்தகத்துடன் ஒரு செல்ஃபி” என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். தொழிலாளர்கள் ஏதாவது ஒரு நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து செல்ஃபி எடுத்து மதுரை கோட்ட இந்தி அதிகாரியின் செல்பேசி எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

எந்த தொழிலாளி அதிகமாக புத்தகத்தோடு செல்ஃபி எடுத்து அனுப்புகிறாரோ அவருக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வீ .ஆர். லெனின், மார்ச் மாத இறுதியில் பரிசுகள் வழங்குவார். இதில் கலந்து கொள்பவர்கள் ஒரு நாள் ஒரு செல்ஃபி தான் அனுப்ப முடியும் என்பது நிபந்தனை.

இது இந்தி மொழியை மறைமுகமாக தொழிலாளர்களிடம் திணிக்கும் முயற்சிதான் என்று பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில், நூலகங்களுக்கு தொழிலாளர்கள் வருவதேயில்லை என்ற நிலையை மாற்றவும், வாசிப்பினை ஊக்குவிக்கவும் இந்தி நூல்கள் மட்டுமன்றி, தொழிலாளர்கள் வாசிக்க விரும்பும் ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற பிற மொழி நூல்களோடும் செல்ஃபி எடுத்து அனுப்பலாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் மதுரைக் கோட்டத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3.30 மணி வரை திறந்துள்ள இந்தி நூலகத்தில் பிற மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக யாரும் அதனைப் பயன்படுத்துவதில்லை. அதனைத் தவிர்ப்பதற்காகவே இத்திட்டத்தை அறிவித்துள்ளோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'இந்தி நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ் உள்ளிட்ட பிறமொழி நூல்களையும் அங்கே வைத்து, 'இனிப்பு' காட்டி ஈர்க்கும் உத்திதான் இது! நூலுடன் செல்ஃபி அதிகமாக எடுத்துக் கொண்டவர்களுக்கு பரிசு என்று சொல்வதிலும், காலப்போக்கில் அல்லது இப்போதேகூட இந்தி புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வோர்க்கு மட்டுமே பரிசு வழங்கப்படும் என்ற அச்சம் உள்ளது.

ஏனெனில், இதை அறிவித்த அதிகாரியின் பதவி பெயர் இந்தி பரப்பும் அதிகாரி. தமிழ் மொழி நூல் அதிகம் படித்தால், இந்தி பரப்பும் அதிகாரி பரிசு தருவாரா? இந்தி நூலகத்திற்குத் தமிழர்களை ஈர்ப்பதற்காக இவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்வண்டி நிலையங்களில் இந்தித் திணிப்பு தீவிரமாக இருக்கிறது. பெரும் பாலும் இந்தி பேசுவோரையே அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் அமர்த்தி உள்ளார்கள். பயணச்சீட்டு முன்பதிவுப் படிவத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அச்சிட்டு பயணிகளுக்குப் பலமுறை கொடுத்துள்ளார்கள். அப்படிவத்தில் தமிழ் மொழி இல்லாதது குறித்து தமிழர்கள் பலமுறை கண்டனங்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

மதுரைக் கோட்டத் தலைமையக அலுவலகத்தில், நிர்வாக அதிகாரிகளின் பதவிப் பட்டியல் பெயர்ப்பலகை உள்ளது. அதில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியுள்ளார்கள். தமிழ் இல்லை. மதுரைக் கோட்டத்தில் செயல்படும் இந்தி நூலகங்கள் பற்றிய செய்தி மட்டுமே இப்பொழுது வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள் இருக்கின்றன.

தென்னகத் தொடர்வண்டித்துறையின் இம்முயற்சியைக் கண்டிப்பதோடு, இந்தி நூலகத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இதற்காக தமிழ்நாடு அரசு தொடர்வண்டித்துறையை வலியுறுத்தி இந்தித் திணிப்பைத் தடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.