ETV Bharat / state

குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி - திமுக வேட்பாளருக்குச் சான்றிதழ்

மதுரை அருகே குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளர்கள் புகார் மனு அளித்தனர்.

குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில் திமுக வேட்பாளருக்குச் சான்றிதழ்

author img

By

Published : Feb 24, 2022, 9:39 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் எண்ணப்பட்டது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்படி பேரூராட்சியில் 10 ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி பழனிச்செல்வி போட்டியிட்டார். டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலெட்சுமி என்பவரும், சுயேச்சை வேட்பாளரான பழனிச்செல்வியும்284 வாக்குகளைச் சரி சமமாகப் பெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். மேலும், குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகக் கூறிய நிலையில் திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்களை அங்கிருந்து வெளியேற்றிக் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரைத் தேர்ந்தெடுத்தனர். குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வியின் பெயர் வந்த போதும், திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி வெற்றி பெற்றதாக முறைகேடாக சான்றிதழ் வழங்கி உள்ளதாக புகார் தெரிவித்தார்.

மேலும், குலுக்கல் முறையில் தன்னுடைய பெயர் வந்ததற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் காவல்துறையினர் பதிவு செய்த வீடியோ கேமராவில் உள்ளதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 3 வேட்பாளர்கள் புகார் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறினர்.

இதையும் படிங்க:வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.