ETV Bharat / state

அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும் - சு. வெங்கடேசன் எம்பி - Staff Selection Commission

அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

su-venkatesh-mp-report-on-postal-assignment

author img

By

Published : Sep 25, 2021, 5:21 PM IST

மதுரை : அஞ்சல் பணி நியமனம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”ஜூலை 7ஆம் தேதி அன்று ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் ( Staff Selection Commission) நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று சோதித்து கூட பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.

எப்படி பணிபுரிய முடியும்?

அஞ்சல் உதவியாளர்கள் முன்வரிசைப் பணியாளர்கள். அஞ்சல் பிரிப்பு உதவியாளர்கள் தபால்கள் உரிய முகவரிக்கு போய்ச் சேருவதை உறுதி செய்ய வேண்டியவர்கள். ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகப் பணிகளை மேற்பார்வையிடுபவர்கள். இவர்களுக்கு உள்ளூர் மொழிகள் தெரியாவிட்டால் எப்படி பணிபுரிய முடியும்? சேவைகளில் சிரமம் ஏற்படும்.

இப்பணி நியமனங்கள் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படுவது என்றாலும் எனது கோரிக்கை அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக "இந்தியா போஸ்ட்" பதில் அளித்துள்ளது. பதிலுக்கு நன்றி.

மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்யுங்கள்

பாதங்களின் அளவுக்கு செருப்பு இருக்க வேண்டுமேயொழிய, செருப்புக்கு தகுந்தாற் போல பாதங்களை செதுக்க முடியாது. மொழி தெரியாதவர்களிடம் மக்கள் எப்படி உரையாடுவது? சேவை பெறுவது? மக்கள் நலனே முக்கியம். அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் தேர்வுகளை கடந்த காலங்களில் இருந்தது போல மாநில அளவில் நடத்துங்கள். மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்யுங்கள்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தடுப்பூசி சிறப்பு முகாம் - 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.