ETV Bharat / state

மனிதர்களும் இயந்திரம்போல் பதிலளிப்பதா? - சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம்

author img

By

Published : Dec 28, 2022, 9:07 PM IST

பாதுகாப்பு துறை சிவில் ஊழியர் தேர்வுக்கான மையத்தை சென்னையில் அமைப்பது தொடர்பாக, பாதுகாப்புத் துறை நியமன அலுவலருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் கடிதத்தையடுத்து, 'மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால், மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது' என சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: 'இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். ஆகவேதான், மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால், மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது' என சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மனிதர்களும் இந்திரம்போல் பதிலளிப்பதா? - சு.வெங்கடேசன் எம்பி ஆதங்கம்
மனிதர்களும் இயந்திரம்போல் பதிலளிப்பதா? - சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம்

இன்று (டிச.28) அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'எளிய குடும்பத்தைச் சேர்ந்த கோவை அனில் குமார் என்பவருக்கு பாதுகாப்பு துறை சிவில் ஊழியர் தேர்வுக்கான மையம் (Defence Dept Civilian Staff Selection Centre) அவர் சென்னையில் கேட்டிருந்தும், 2500 கி.மீ. தூர உத்தரகாண்ட் கனாசரில் போடப்பட்டு இருந்தது. மையத்தை மாற்றி தருமாறு 02.12.1022 அன்று பாதுகாப்புத்துறை நியமன அலுவலருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு 15.12.2022 அன்று பதில் வந்துள்ளது. மையங்கள் எல்லாமே கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மனித தலையீடு இல்லை என்று. எப்படி எளிய குடும்பத்து தேர்வர்கள் பல்லாயிரம் கி.மீ. பயணித்து செல்வது? எத்தனை நாள் பயணம்? எவ்வளவு அலைச்சல்? எவ்வளவு செலவு? இயந்திரம் இயந்திரத் தனமாகத்தான் இருக்கும். ஆகவே தான், மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால், மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: TRB: 15,149 பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.