ETV Bharat / state

அக்.13-இல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு!

Boycott outpatient treatment in Madurai: அக்டோபர் 13ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.

boycott outpatient treatment in Madurai
மதுரையில் அக்.13ஆம் தேதி வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை புறக்கணிப்பு - தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 7:24 AM IST

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில், அதன் பொதுக்குழு கூட்டம் நேற்று (அக் 07) நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிகார வரம்பு மீறி செயல்பட்ட மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலரை உடனடி பணியிடை நீக்கம் செய்யக்கோரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த அக்டோபர் 2 முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், நேற்றைய முன்தினம் (அக்.6) சுகாதாரத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். CHO பணியிடை நீக்கம் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாக, "அதிகார வரம்பு மீறி நடந்து கொண்ட மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலரை உடனடி பணியிடை நீக்க கோரி நடைபெற்று வரும் நியாயமான போராட்டத்திற்கு அரசு உரிய தீர்வு காணும் வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

அக்டோபர் 2 முதல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செய்து வரும் போராட்டங்கள் அனைத்தும் தொடரும். நாளை (அக்.9) முதல் ENTRY பயோமெட்ரிக் பதிவேடு செய்யப்படாது. துறையில் உள்ள வருகை[ பதிவேட்டில் மட்டும் பதிவு செய்யப்படும். வருகிற 11ஆம் தேதி அன்று அனைத்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களும் தற்செயல் விடுப்பு (MASS CL) எடுத்து, அன்று நோயாளி சிகிச்சை பணிகள் செய்யும் போராட்டம் நடத்தப்படும்.

அன்று நோயாளி சிகிச்சை பணி தவிர, மருத்துவ மாணவர்கள் வகுப்பு மற்றும் மற்ற பணிகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும். அன்றைய தினம் மதியம் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், இந்திய மருத்துவ கழக வளாகத்தில் இந்திய மருத்துவ கழகத்தின் ஆதரவுடன் நடைபெறும்.

மேலும், அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வருகிற 13ஆம் தேதி அன்று வேறு வழி இன்றி அரசு ராஜாஜி மருத்துவமனையின் அனைத்து வெளி நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகு 14ஆம் தேதி அன்று பொதுக்குழு கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிரடி ஆஃபர்களுக்கு நடுவே பதறவைக்கும் மோசடிகள்.. பண்டிகை பர்சேஸில் கவனம் தேவை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.