ETV Bharat / state

'வணிகர்கள் வரி வருவாயில் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை' - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை: போலிப் பட்டியல் மூலம் அரசுக்கு கிடைக்கக்கூடிய வரி வருவாயில் மோசடி செய்யும் குறிப்பிட்ட வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வணிகர்கள் வரி வருவாயில் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

author img

By

Published : Jun 8, 2021, 10:09 PM IST

இது குறித்து இன்று (ஜூன்.08) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வணிகத்தில் ஈடுபடாத சில அமைப்புகள், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வரி செலுத்தும் நபராகப் பதிவு செய்து அதன்மூலம் சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல், போலிப் பட்டியல்கள் மூலம் பயனாளிகளுக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவது தமிழ்நாடு வணிகவரித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்தப் பயனாளர்கள் இதுபோன்ற பொய்யான பரிவர்த்தனைகளில் உள்ளீட்டு வரி வரவு எடுப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். போலி பட்டியல்கள் வழங்குதல், அதற்கு எவ்வகையிலேனும் உடந்தையாக இருத்தல், போலி பட்டியல்கள் மீது உள்ளீட்டு வரி வரவு எடுத்தல் ஆகியவை தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017இன்படி அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்.

மேலும் மோசடியாகப் பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, அதற்குண்டான வட்டி, அபராதத் தொகையுடன் வசூலிக்கப்படும்.

எனவே மேலே கூறப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற தவறுகளைக் கண்காணிக்க தவறும் வணிகவரித் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.