மதுரை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ”அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன அருகதை இருக்கிறது” என்று ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இதைக் கூறுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது எனக் காட்டமாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ஜெயலலிதாவின் புகழ் நிலைத்திருக்க வேண்டி முதலமைச்சர் கையெழுத்திட்டு ஈரம் காய்வதற்கு முன்னதாகவே அரசாணை பிறப்பித்துள்ளார். இதனை அனைத்துப் பெண்களும் வரவேற்றுள்ளனர். இத்தினத்தை எதிர்ப்பதன் மூலம் ஸ்டாலின் தரம் குறைந்து, தகர டப்பாவாக தெரிகிறார். முதலமைச்சர் தங்கமாக உயர்ந்துள்ளார்” என்றார்.
இதையும் படியுங்கள்: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்!