ETV Bharat / state

எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில் வினாத்தாள் - மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

எஸ்எஸ்சி தேர்வில் இடம் பெறவுள்ள வினாக்கள் இந்தி மொழியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேட்கவிருப்பது, சமவாய்ப்பு கோட்பாட்டிற்கு எதிரானது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில் வினாத்தாள் - மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்
எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில் வினாத்தாள் - மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்
author img

By

Published : Oct 7, 2022, 12:34 PM IST

மதுரை: எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில் கேள்வித்தாள் உள்ளது குறித்து, மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20,000 காலியிடங்களுக்கு ‘ஸ்டாப் செலக்சன் கமிசன்’, பணி நியமன அறிவிக்கையை 17.09.2022 அன்று வெளியிட்டுள்ளது.

இது மிகப்பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. பணி நியமனத் தேர்வு கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே (இந்தி, ஆங்கிலம்) இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 20000 ஒன்றிய அரசுத் துறை/ நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு.

    இந்தியில் கேள்வித் தாள் உண்டு.
    தமிழில் இல்லை.

    ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி.

    இந்திக்கான தனி உரிமையை மறுப்போம்.
    இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம். @ssc_official__ #Tamil #Exam pic.twitter.com/WAPZxGpxsf

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மாநில மொழிகளுக்கு இடம் இல்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்தியல்லா மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது ஆகும். மேலும் இப்படி பணி நியமனம் பெறப் போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப்போகிறார்கள்? ஏற்கனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிகக் குறைவாக உள்ளதென்ற பிரச்னைகள் பல துறைகளின் அல்லது நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளிப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஸ்டாப் செலக்சன் கமிசன் பணி நியமனங்களும், மொழி சமத்துவம் கடைப்பிடிக்கப்படாததால் அத்தகைய பாரபட்சத்தை உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது. எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாப் செலக்சன் கமிசன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தி திணிப்பை எதிர்த்து மதிமுக எப்போதும் போராடும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.