ETV Bharat / state

இலங்கை தாதாவின் சினிமா ஆசை...! - இலங்கை தாதாவின் மறுபக்கம்

மதுரை: அங்கொடா லொக்கா மூக்கு அறுவை சிகிச்சை (plastic surgery) செய்திருந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

sri lankan don angoda lokka did nose plastic surgery

author img

By

Published : Aug 7, 2020, 4:25 PM IST

இலங்கையைச் சேர்ந்தவர் சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொடா லொக்கா. பிரபல தாதாவான இவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏழு பேரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஜூலை 3ஆம் தேதி அங்கொடவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அப்போது அவருடன் இருந்த காதலி அமானி தாஞ்ஜி மற்றொரு பெண்ணான சிவகாமசுந்தரியுடன் சேர்ந்து பெயரை மாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததால், கோவை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னர் இந்தப் பெண்கள் இருவரும் தியானேஸ்வரன் என்பவரின் உதவியோடு மதுரைக்கு அங்கொடாவின் உடலைக்கொண்டு வந்து தகனம் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்

இந்நிலையில், இலங்கையை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரம் குறித்து குற்றப்பிரிவு புலனாய்வு துறை (சிபிசிஐடி) மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.

விசாரணையில், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, பெரிதாக இருந்த தனது மூக்கை சிறிதாக மாற்ற நினைத்த லொக்கா மதுரை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் கடந்த ஜனவரி மாதம் மூக்கு அறுவை சிகிச்சை (plastic surgery) செய்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க...இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.