இலங்கையைச் சேர்ந்த பிரபல நிழலுலக தாதா அங்கோடா லொக்கா உடல் மதுரையில் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவருக்கு உதவியதாகக் கருதப்படும் வழக்கறிஞர் சிவகாமிசுந்தரி தங்கியிருந்த மதுரை ரயில் நகர் பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று (ஆக. 6) விசாரணை மேற்கொண்டனர்.
சிவகாமி சுந்தரியின் அலுவலகத்தில் 13 மணி நேரம் நடத்திய சோதனையில், அங்கிருந்து மூன்று பாஸ்போர்ட், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள், வங்கி ஆவணங்கள், பத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை சிபிசிஐடி காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதனடிப்படையில் நாளை (ஆக. 8) வங்கியில் பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. நகைகள் குறித்தும் விசாரணை நடத்தவுள்ளனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் வழக்கறிஞரின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர். அதுமட்டுமின்றி நாளை (ஆக. 8) இந்திய 'ரா' உளவு அமைப்பினர் விசாரணை நடத்த வாய்ப்பும் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க...அங்கொடா லொக்கா விவகாரம்: மதுரையில் சிவகாமி வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடியினர் சோதனை!