ETV Bharat / state

தனுஷ்கோடிக்கு ரயில்பாதை; வனத்துறை நிலம் வழங்கினால் தயார் - தெற்கு ரயில்வே! - Rameshtwaram to Madurai train Ticket

தனுஷ்கோடிக்கு ரயில்பாதை அமைக்க வனத்துறை நிலத்தை வழங்கினால் திட்டம் விரைவில் தொடங்கலாம் என தெற்கு ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே
author img

By

Published : Feb 4, 2023, 7:40 AM IST

தனுஷ்கோடிக்கு ரயில்பாதை; வனத்துறை நிலம் வழங்கினால் தயார் - தெற்கு ரயில்வே

மதுரை: 2023-24 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ரயில்வே துறையின் கிடைக்கும் திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலமாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, "அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் அம்பாசமுத்திரம், காரைக்குடி, பழனி, சோழவந்தான், விருதுநகர் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தபட உள்ளன.

ரயில்வே பாதைகள் மின் மயாமாக்கல் பணி 76 சதவிதம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்திற்குள் 90 சதவித பணிகளும் முடிக்கப்படும். ரயில் பாதைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை எனவும், வனத்துறை கட்டுப்பாட்டில் நிலங்கள் இருப்பதால் வனத்துறை கையகப்படுத்தி வழங்கினால் தனுஷ்கோடி வரை ரயில் பாதை விரைவில் அமைக்கப்படும்.

மதுரையின் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையம் தற்போது வர வாய்ப்பில்லை. கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு போதிய சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சென்று வர முடியாத சூழல் உள்ளதால் தற்போது வர வாய்ப்பு இல்லை. ராமேஸ்வரத்திற்கு செல்லும் பழைய ரயில்வே பாலத்தை தற்போது பயன்படுத்த முடியாது. புதிய பால பணிகள் ஜூன், ஜுலை மாதங்களுக்குள் நிறைவடையும்.

ராமேஸ்வரம் - மதுரைக்கும், மதுரை - ராமேஸ்வரத்திற்கும் ரயிலில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிக்கும் போது ரயில் டிக்கெட்டுகளை காண்பித்து பயணிக்கலாம் என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி கண்டன முழக்கம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.