ETV Bharat / state

கரோனா நெருக்கடியில் உயிர் காக்கும் மருந்துத் துறை மீள்வதற்கு வழி என்ன? - covid 19 experimental vaccine

கரோனா நெருக்கடியினால் மற்ற துறைகளைப் போன்றே மருந்துத் துறையும் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்துவருகிறது. மக்களின் உயிர் காக்கும் முக்கியத் துறையென்றே கருதப்படும் மருந்துத் துறை மீள்வதற்கு வழிதான் என்ன? இது குறித்து அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

’தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய மருந்துத் துறை’ மீள்வதற்கு வழி என்ன..?

author img

By

Published : Aug 18, 2020, 2:59 PM IST

Updated : Aug 19, 2020, 3:39 PM IST

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நாட்டில் பரவத் தொடங்கிய கரோனாவால் கடைக்கோடி கிராமங்கள்கூட பாதித்தன. தொடர்ச்சியான ஊரடங்கு, அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் கட்டாயமாக்கப்பட்ட கரோனா பரிசோதனை என எளிய மக்கள் திக்குமுக்காடிப் போயினர்.

நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேகத்தில் மருத்துவம் பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் இதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட துணை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் விரைவாகப் பாதிக்கப்பட்டனர், சிலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

தற்போது, நாடு முழுவதும் சிற்சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கின்றது. ஆனால், பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இது உலக விநியோகச் சங்கிலியை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் பொருளாதாரம் சரிவை எட்டியுள்ளது.

மற்ற துறைகளைப் போன்றே மருந்துத் துறையும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக இத்துறையில் 25 ஆண்டு கால அனுபவம் கொண்ட மருந்து விற்பனை மேலாளர் பாண்டியராஜனிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ”பொதுவாக எந்தவித மாற்றமும் இல்லாத வளர்ச்சியை நோக்கி மட்டுமே செல்கின்ற துறையாக உணவு, மருந்துத் துறைகளையே குறிப்பிடுவது உண்டு. ஆனால் கரோனா நெருக்கடி இந்தத் துறைகளை முற்றிலும் புரட்டிப் போட்டுவிட்டது.

பொதுமுடக்கத்திற்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களில் மிகக் கடுமையான இழப்பை மருந்துத் துறை சந்தித்தது. இதற்கிடையே மே மாதத்தில் சற்று தலைநிமிர்ந்த நிலையில், கரோனா தொற்றின் பரவல் மிக வேகமாகத் தொடங்கியது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதனால் மீண்டும் மருந்து விற்பனை பெருமளவு சரியத் தொடங்கியது. மருந்து விற்பனையைப் பொறுத்தவரை மாவட்டம் விட்டு மாவட்டங்கள் செல்ல வேண்டிய பணி முக்கியமானதாக இருக்கிறது.

இந்நிலையில், விற்பனையில் ஈடுபட்டிருக்கின்ற நபர்கள் தங்களது மாவட்டங்களை விட்டுச் செல்ல முடியாத நிலையில் சிக்கிக் கொண்டனர். ஆனால் இ-பாஸ் இவர்களுக்கு கைக்கொடுத்தது. இதனால், இதயநோய், சர்க்கரை, சுவாச சிக்கல்கள் சார்ந்த மருந்துகளின் விற்பனையில் பின்னர் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

காய்ச்சல், தலைவலி, இருமல், சளி போன்ற நோய்கள் சார்ந்த மருந்துகளின் விற்பனையில் தற்போதுவரை முன்னேற்றம் இல்லை. 2019 ஜூன் மாத விற்பனைக்கும் 2020 ஜூன் மாத விற்பனைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது” என்கிறார்.

AIOCD AWACS என்ற இணையதளத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் மருந்துகளின் விற்பனை விகிதம் கடந்த ஜூன் மாதம் 2.5 விழுக்காடாக இருந்த நிலையில், ஜூலை மாதம் 0.2 விழுக்காடாகக் குறைந்தது. அதேபோன்று இதயவியல் சார்ந்த மருந்துகளின் விற்பனை 13.9-லிருந்து 13.1-ஆகக் குறைந்துள்ளது.

சர்க்கரை சார்ந்த மருந்துகளைப் பொறுத்தவரை 8.5-லிருந்து 5.9-ஆகவும், சுவாசம் சார்ந்த மருந்து விற்பனை 4.2-லிருந்து மைனஸ் 2-ஆகவும், எதிர்ப்புத் தொற்றுகளுக்கான மருந்துகளைப் பொறுத்தவரை மைனஸ் 9.7-லிருந்து மைனஸ் 10.2-ஆகவும், வாயு சம்பந்தமான மருந்துகளைப் பொறுத்தவரை 0.4-லிருந்து மைனஸ் 2.4-ஆகவும், வைட்டமின் மாத்திரைகளின் விற்பனையைப் பொறுத்தவரை 5.7-லிருந்து 5.5-ஆகக் குறைந்துள்ளன.

அதேபோன்று வலி நிவாரண மருந்துகளைப் பொறுத்தவரை மைனஸ் 1.9-லிருந்து மைனஸ் 6.7-ஆகக் குறைந்துள்ளன.

இது தொடர்பாக மதுரை திருநகர் ஸ்ரீ நாராயணா மருந்துக்கடையின் உரிமையாளர் என். வரத நாராயணனிடம் கேட்கையில், “பொதுமுடக்கத்தின் தொடக்க காலத்தில் எங்களுக்கு மிகப்பெரும் சிக்கல் இருந்தது. பிறகு அத்தியாவசியப் பொருள்களில் தமிழ்நாடு அரசு தளர்வு கொடுத்ததும் அந்நிலை மாறியது.

தற்போது மருத்துவமனைகள் திறக்கப்படாததால் விற்பனையில் தொடர்ந்து சரிவையே சந்தித்துவருகிறோம். காய்ச்சல், தலைவலி என்று வருகின்ற பொதுமக்களுக்கு எங்களால் மருந்து, மாத்திரைகள் தர முடியவில்லை. காரணம் அதற்கான கட்டுப்பாடுகள் இப்போதும் உள்ளன.

தற்போதைய கரோனா காலத்தில் வைட்டமின் மாத்திரைகளும், ஜிங்க் மாத்திரைகளும், சத்து டானிக்குகளும்தான் விற்பனையாகின்றன. நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் ஆயுர்வேத மாத்திரைகள், கபசுரக் குடிநீர் போன்ற சித்த வைத்தியம் சார்ந்த மருந்துகள்தான் அதிகம் விற்கின்றன.

கரோனா குறித்த அச்சம் நிலவுவதால் அது சார்ந்த மருந்துகளில்தான் மக்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். திறந்திருக்கின்ற ஒருசில மருத்துவமனைகளிலும்கூட அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன” என்றார்.

பொதுவாக மருந்து உற்பத்தித் துறை மீட்சிப்பெற வேண்டுமானால், பொதுப்போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

கரோனா நெருக்கடியில் உயிர் காக்கும் மருந்துத் துறை மீள்வதற்கு வழி என்ன?

அதேபோன்று மருத்துவமனைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் அவை இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், இ-பாஸ் முறை ரத்துசெய்யப்படுவதும் அவசியம் என்பதையே தங்களது வேண்டுகோளாக மருந்துத் துறையில் உள்ளவர்கள் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க:6 கோடி அளவிலான கரோனா தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் ஒப்பந்தம்

Last Updated : Aug 19, 2020, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.