ETV Bharat / state

ரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை.. பயணிகளிடையே நல்ல வரவேற்பு - தெற்கு ரயில்வே! - மதுரை ரயில்வே கோட்டம்

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், உள்ளூர் புகழ் வாய்ந்த உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது, ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:31 AM IST

மதுரை: இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 27 ரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரை ரயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலைகள் விற்பனை செய்து சாதனை வருமான அளவாக 81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ரூபாய் ஈட்டியுள்ளனர். இதே போல திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனையில் 28 லட்சத்து 23 ஆயிரத்து 71 ரூபாயும், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 270 ரூபாயும் ஈட்டியுள்ளனர்.

மேலும், திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் 23 லட்சத்து 35 ஆயிரத்து 405 ரூபாயும், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனையில் 15 லட்சத்து 43 ஆயிரத்து 975 ரூபாயும், திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் 12 லட்சத்து 24 ஆயிரத்து 297 ரூபாயும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 655 ரூபாயும், தென்காசியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 210 ரூபாயும், ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனையில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 650 ரூபாயும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனையில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 201 ரூபாயும், மணப்பாறையில் முறுக்கு விற்பனையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 10 ரூபாயும், மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் 3 லட்சத்து 575 ரூபாயும், காரைக்குடியில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள் விற்பனையில் 3 லட்சத்து 429 ரூபாயும், சாத்தூரில் சேவு விற்பனையில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 640 ரூபாயும், உள்ளூர் சிறு குறு உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.

மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மர விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கையில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள், கொடைக்கானல் ரோட்டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட்கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்குடியில் விவசாய விளைபொருட்கள், வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை போன்றவை நடைபெற்று வருகின்றன.

ரயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும்.

மேலும் கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படைத்தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெறப்படுகிறது.

இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வு குழு குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரயில் நிலையங்களில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகிறது.

உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் மட்டும் ரயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது. சிறிய ரயில் நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப பதிவு கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது" என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமின் வழக்குகள் தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.