ETV Bharat / state

தென்னிந்திய வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்கள் யார்? - தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! - nellai Vande Bharat Train

Nellai-Chennai Vande Bharat Train: சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நடுத்தர வயதினரை அதிகம் ஈா்ப்பதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நடுத்தர வயதினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்..தெற்கு ரயில்வே நிா்வாகம்
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 7:34 AM IST

Updated : Oct 26, 2023, 1:58 PM IST

மதுரை: நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலை நடுத்தர வயது பிரிவினர் அதிகம் பயன்படுத்துவதோடு, இதுவரை 77 சதவீதம் பேர் குடும்பத்துடன் அதில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி - சென்னை ரயில் நிலையங்களுக்கு இடையே செப்டம்பர் 24 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், இதுவரை 77 சதவீதம் பேர் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளனர்.

16 சதவீத அளவில் வர்த்தக பிரமுகர்கள் பயணம் செய்துள்ளனர். மொத்தத்தில் 36 சதவீத அளவில், 35 முதல் 49 வயது வரை உள்ள பொதுமக்கள் வந்தே பாரத் ரயிலில் விரும்பி பயணிக்கின்றனர். 64 சதவீதம் மற்ற வயது வரம்பில் உள்ள பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து. தற்போது, நவீன வசிதகளுடன் அதிவிரை ரயிலாக, 34 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே அளவில் ஆறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா பிரிவில் தலா ஒரு வந்தே பாரத் ரயிலும், கோட்டயம் மற்றும் ஆலப்புழா வழியாக திருவனந்தபுரம் - காசர் கோடு பிரிவில் இரு தனி தனி வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்துக்குள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்திற்கும் எதிர்பாராத அளவில் பயணிகள் அபரிமிதமான ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு ஒரே பணிக்கு இருத் தேர்வுகளை நடத்துவதா? - ஆசிரியர்கள் தேர்வு விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் சேவை குறித்து பயணிகளிடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை- மைசூரு, சென்னை - கோவை, சென்னை-திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா, ஆகிய 4வந்தே பாரத் ரயில்களின் சேவைகள், பயணிகள் ஆக்கிரமிப்பு விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பில் வணிகர்கள் 11 முதல் 42 சதவீதம் வரையிலும், குடும்பங்களுடன் செல்பவர்கள் 35 முதல் 77 சதவீதம் வரையிலும், 35 முதல் 49 வயதுக்குள்பட்டவர்கள் 26 முதல் 46 சதவீதம் வரையிலும் பயணம் செய்துள்ளனர். மேலும், கோட்டயம் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில், கோவை, மைசூர், விஜயவாடா வந்தே பாரத் ரயில்களில் 7 முதல் 20 சதவீதம் பேர் சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதற்கு காரணம் மற்ற ரயில்களைக் காட்டிலும் இந்த ரயில்களின் வேகம், நவீன மற்றும் விமான பயணத்திற்கு இணையான வசதிகளான இணையதள சேவை உதவியுடன் கூடிய மின்னணு தகவல் பலகைகள், வசதியான இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த எளிய நவீன வசதிகள், அவசர உதவிக்கு ரயில் லோகோ பைலட்டுடன் பேச டெலிபோன் வசதி, சிசிடிவி கண்காணிப்பு, தானியங்கி கதவுகள், ஒவ்வொரு இருக்கை அருகிலும் மொபைல் சார்ஜிங் வசதி, எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் இருக்கைகளை திருப்பி ஜன்னல் வழியாக நேரடியாக வேடிக்கை பார்க்கும் வசதி, ருசியான சைவ, அசைவ உணவு, காபி, டீ, தண்ணீர் பாட்டில் வழங்கல், ரயிலின் முன் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை செல்லும் வசதி, காற்று அழுத்தத்தில் இயங்கும் சுத்தமான கழிப்பறைகள் ஆகியவை ஆகும்.

இந்த நவீன வசதிகள் பயணிகளை வந்தே பாரத் ரயிலில் அதிக அளவில் பயணிக்க ஈர்க்கின்றன” என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 40 தொகுதிகளில் அதிமுக வென்றால் ஈபிஎஸ் பிரதமராகும் வாய்ப்பு - மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி!

Last Updated : Oct 26, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.