Pongal Special Trains: சென்னை: தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14அன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் அதி விரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18அன்று மாலை 05.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க:Joshimath: ஹோட்டல்கள் இடிப்பு.. மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை