மதுரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) ஆகியவை டிச.6 மற்றும் 7 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
வரும் டிச.5 முதல் 10 ஆம் தேதி வரை, மதுரை-விழுப்புரம் இடையேயான விரைவு ரயிலானது (16868) மதுரை-திண்டுக்கல் இடையே, பகுதியாக ரத்து செய்யப்படும். அதேபோல மீண்டும், வரும் டிச.12 முதல் 15 ஆம் தேதி வரையிலும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06654) டிசம்பர் மாதம் முழுவதும் வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில், ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11மணிக்கு பதிலாக மதியம் 12மணிக்கு, ஒரு மணி நேரம் கால தாமதமாக புறப்படும்.
இதேபோல மதுரை முதல் தெலங்கானாவின் கச்சக்குடா வரையிலான வாராந்திர விரைவு ரயில் டிச.7 ஆம் தேதி மதுரையில் இருந்து காலை 05.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, காலை 06.30 மணிக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு பறக்கும் சாலை பணி தள்ளிப்போகிறதா..?