ETV Bharat / state

'இரு வேறு ரயில்களின் ரத்து நீக்கம்' - தென்னக ரயில்வே - ரயில்கள் மீண்டும் இயக்கம்

பயணிகள் வருகை குறைவு காரணமாக, பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதின் கால அளவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இருவேறு ரயில்கள் மீண்டும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே
தென்னக ரயில்வே
author img

By

Published : May 27, 2021, 10:15 PM IST

பயணிகள் வருகை குறைவு காரணமாக பல்வேறு ரயில்கள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த ரத்தானது ஜுன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று (மே.26) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரத்து நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட இரண்டு ரயில்களும், மீண்டும் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சில ரயில்கள் பகுதி அளவாக இயக்கப்படும் எனவும், இரு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், மங்களூரு சென்ட்ரல் - நாகர்கோவில் ஆகிய இரு ரயில்களும் இருமருங்கிலும் இயக்கப்படும். இதன்மூலம் ரத்து நடவடிக்கை நீக்கப்பட்டுள்ளது.

2.மதுரை - புனலூர் ரயில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டு திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல புனலூருக்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கின்றது.

3.சென்னை - குருவாயூர் ரயில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரையில் இயக்கப்படுகின்றது. திருவனந்தபுரத்தில் இருந்து குருவாயூர் வரை பகுதி அளவாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. திருவனந்தபுரம் - மால்டா இடையே வரும் 4 ஆம் தேதி முதல், முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இதற்கான முன்பதிவு வரும் 29ஆம் தேதி தொடங்குகின்றது.

5. திருச்சி - திருவனந்தபுரம், எழும்பூர் - ராமேஸ்வரம் ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகின்றது.

இதையும் படிங்க : Covid 19 ஆறு மாவட்டங்களில் கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.