மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தாம்பரம் - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06001) ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய நாட்களில், தாம்பரத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
-
Catch the #Tuticorin - #Tambaram Pongal Special!
— Southern Railway (@GMSRailway) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Passengers are requested to take note on this and plan your #travel
Link : https://t.co/1uJLRqETku#SouthernRailway pic.twitter.com/slSDN8ifLw
">Catch the #Tuticorin - #Tambaram Pongal Special!
— Southern Railway (@GMSRailway) January 10, 2024
Passengers are requested to take note on this and plan your #travel
Link : https://t.co/1uJLRqETku#SouthernRailway pic.twitter.com/slSDN8ifLwCatch the #Tuticorin - #Tambaram Pongal Special!
— Southern Railway (@GMSRailway) January 10, 2024
Passengers are requested to take note on this and plan your #travel
Link : https://t.co/1uJLRqETku#SouthernRailway pic.twitter.com/slSDN8ifLw
மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06002), ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் காலை 06.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 08.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்களில் 22 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.