ETV Bharat / state

காரைக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - karaikudi express

pooja holidays special train: சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் காரைக்குடிக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

காரைக்குடி நாகர்கோவிலுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…தென்னக ரயில்வே அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 2:21 PM IST

மதுரை: சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்ததுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “காரைக்குடி சிறப்பு ரயில் (06039), டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, அக்டோபர் 22 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.30 மணிக்கு காரைக்குடி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06040), அக்டோபர் 23 அன்று காரைக்குடியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள், இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், நான்கு குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

நாகர்கோவில் சிறப்பு ரயில்: சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06046) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 24 அன்று இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில் (06045), சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஐந்து குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்” என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீட் விலக்குக்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.