மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வஞ்சி மலர். இவர் தன்னுடைய 19 வயது மகனான ஓம் சக்தி என்ற சாலமனுடன் வசித்துவந்தார். நேற்று (பிப். 1) இரவு வஞ்சி மலர் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர் மீது ஓம் சக்தி அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்தார்.
பெற்ற தாயை மகனே கல்லைத் தூக்கிப் போட்டு கொலைசெய்த இச்சம்பவம் செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஓம் சக்தியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... சீர்காழி கொலை வழக்கு: குற்றவாளிகளைத் துண்டுத்துண்டாக வெட்டக்கோரி முதலமைச்சருக்கு காணொலி!