மதுரை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நன்மாறன் (74) மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று (அக்.28) காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுரை மாப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட குழுக்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த நன்மாறன் உடலுக்கு பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "ஏழை குடும்பத்தில் பிறந்து; ஏழையாக மறைந்த தோழர் நன்மாறன் புகழ் காலம் உள்ளவரை நிலைத்து இருக்கும் " என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!