ETV Bharat / state

2020ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டை காண மோடி வரவேண்டும்! - முகிலன் - மஞ்சுவிரட்டை காண மோடி வரவேண்டும்

மதுரை: 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மஞ்சுவிரட்டுப் போட்டியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி என சமூக செயற்பாட்டாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.

முகிலன் பேட்டி
author img

By

Published : Nov 23, 2019, 2:50 AM IST

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கி விட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடி வர வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுகின்றனர்.

முகிலன் பேட்டி
தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் சட்ட மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளது. இதனால் நாட்டு மாடு வைத்திருப்பவர்கள் நேரடியாக பசுவோடு கலக்க விடக்கூடாது. அதற்கு அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டும். தனியாக தொழுவம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மாடு இனங்களை அழிப்பதற்கான முயற்சியாகும். அதனால் தமிழ்நாடு அரசு கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்தால் தமிழ்நாட்டின் நாட்டு மாடு இனங்களை அழித்து விடலாம் என நினைக்கின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமசோதவை திரும்பப் பெற வேண்டும். கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்ட மசோதவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் இணைந்து கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்களை காவல்துறையை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டி தண்டனை வழங்க குரல் கொடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு உரிமை இழந்த மாநிலமாக மாறி வருகிறது, இவ்வாறு கூறினார்.

Intro:*மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் பேட்டி.*

*வருகிற ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பிரதமர் மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி.*Body:*மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் பேட்டி.*

*வருகிற ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பிரதமர் மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி.*

*ஆனால் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கி விட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடி வர வேண்டும்.*

*அப்படி இல்லையென்றால் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.*

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசு தமிழக மக்களுக்கு விரோதமான ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஒரு சட்ட மசோதவை அரசு கொண்டு வர உள்ளது.

இச்சட்டத்தால் நாட்டு மாடு வைத்திருப்பவர்கள் நேரடியாக பசுவோடு கலக்க விடக்கூடாது. அதற்கு அரசின் பல்வேறு துறைகளின் அனுமதியை பெற வேண்டும். தனியாக தொழுவம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இது நாட்டு மாடு இனங்களை அழிப்பதற்கான முயற்சியாகும்.

சில மாதங்களில் பீட்டா மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்க கோரிக்கை வைக்கும்.

இந்திய அரசு இன்னும் ஜல்லிக்கட்டு குறித்த சட்டத்தை அப்படியே வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு ஒரு எல்லை தான் உள்ளது. அது விரைவில் நொறுங்கிவிடும்..

அதனால் தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்தால் தமிழகத்தின் நாட்டு மாட்டு காளை இனங்களை அழித்து விடலாம் என நினைக்கின்றனர்.

தமிழக அரசு உடனடியாக இந்த சட்டமசோதவை திரும்ப பெற வேண்டும்.

கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்ட மசோதவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் இணைந்து கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு வழக்கு, மணற்கொள்ளைக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு உள்ளிட்டற்றில் நாட்டுக்காக, மக்களுக்காக போராடியவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்ப பெற தமிழக அரசியல் கட்சிகள் அழுத்தம் தர வேண்டும். குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்களை அரசு காவல்துறையை வைத்து எப்படி நடத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டி தண்டனை கொடுக்க குரல் கொடுக்க வேண்டும்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் பேட்டி.

தொடர்ந்து கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணையை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது.பாலாற்றில் தடுப்பணை கட்டி வருகிறார்கள். காவிரி ஆற்றிலும் தடுப்பணை கட்டி வருகிறார்கள்.
தமிழகம் உரிமை இழந்த மாநிலமாக மாறி வருகிறது.

இந்நியா என்றால் இந்தி என்று மத்திய அரசு கொக்கரித்து கொண்டு உள்ளது. தமிழக அரசு அதற்கு துணை போகிறது.

இனி தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட உள்ளது.

அரசின் இந்நி திணிப்பை எதிர்த்து குரல் கொடுப்போம்.

மீண்டும் இந்தி திணிப்பு மோடி அரசின் செயல்பாட்டால் தமிழகத்தை பற்றிக்கொண்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.