மதுரை மாவட்டம் மாடக்குளம் அருகே உள்ளது பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெருவில் வீடுகள் அருகருகே இருந்தாலும், அதற்குப் பக்கத்தில் அங்காங்கே புதர்கள் உள்ளன. அந்தப் பகுதியில் இன்று 6 அடி உயரமுள்ள பாம்புகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடுவது போல் அசைந்தாடி கொண்டிருந்தன.
அப்பொழுது அங்கிருந்தவர்கள் அதை கண்டு தங்கள் செல்போன்களில் படம் பிடித்தும், பார்த்தும் ரசித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த நடனக் காட்சி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.