ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டிக்காக பலிகடாவாகும் 400 மரங்கள்! கிளம்பும் எதிர்ப்புகள் - smart city

மதுரை: (ஸ்மார்ட் சிட்டி) சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் காளவாசல் பகுதியில் கட்டப்பட்டுவரும் எட்டு வழிப்பாலத்திற்காக 400 மரங்களை வெட்டுவதற்கு சூழலியல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த்
author img

By

Published : Jun 20, 2019, 8:24 AM IST

Updated : Jun 20, 2019, 9:09 AM IST

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மதுரை குரு திரையரங்கில் இருந்து சொக்கலிங்கநகர் சந்திப்பு வரை எட்டு வழிப்பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பாலத்திற்காக சாலையின் இருபக்கங்களிலும் உள்ள 400 மரங்களையும் வெட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முதற்கட்டமாக வெட்டப்பட்டுள்ளதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கூறுகையில், 'வளர்ச்சி என்னும் பெயரில் அரசே மரங்களை வெட்டி தூய்மைக்கேட்டிற்கு வித்திடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாக மதுரையின் சராசரி வெப்ப அளவு 40-லிருந்து 42 டிகிரி வரை கூடியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் மரங்கள் அழிக்கப்பட்டதுதான். மரங்களை வளர்ப்பது மாற்றுத் தீர்வு என்றாலும், இருக்கின்ற மரங்களைக் காப்பாற்றுவது மிகவும் அவசியமான ஒன்று.

சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த்
சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த்

மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க பொதுமக்களும், இளைஞர்களும் போராட முன் வர வேண்டும். வெறுமனே முகநூல் பக்கத்தில் கருத்துச் சொல்வதோடு நின்றுவிடக்கூடாது. மக்கள் திரண்டு நின்றால்தான் அரசுக்கும், அலுவலர்களுக்கும் பயம் ஏற்படும்' என்று தெரிவித்தார்.

Intro:மதுரை காளவாசல் பாலத்திற்காக பலிகடாவாகும் 400 மரங்கள் - சூழலியல் ஆர்வலர்கள் வேதனை

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காளவாசல் பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலத்திற்காக 400 மரங்கள் வெட்டப்படவிருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Body:மதுரை காளவாசல் பாலத்திற்காக பலிகடாவாகும் 400 மரங்கள் - சூழலியல் ஆர்வலர்கள் வேதனை

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காளவாசல் பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலத்திற்காக 400 மரங்கள் வெட்டப்படவிருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் தற்போது பல்வேறு பகுதிகளில் பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை குரு தியேட்டர் அருகேயிருந்து சொக்கலிங்கநகர் சந்திப்பு வரை எட்டுவழி பாலம் ஒன்று தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையால் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பாலத்திற்காக குரு தியேட்டரிலிருந்து வசந்தநகர் பாலம் வரை சாலையின் இரு பக்கமும் வளர்ந்துள்ள சற்றேறக்குறைய 400 மரங்கள் வெட்டப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கி 50-க்கும் மேற்பட்ட மரங்கள் தற்போது முதற்கட்டமாக வெட்டப்பட்டுள்ளதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சூழலியல் ஆர்வலர் கார்த்திகேயன் கூறுகையில், 'மதுரையில் தற்போது பல்வேறு வகையிலும் மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மதுரை நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை, பரவை-சமயநல்லூர் சாலை போன்ற பகுதிகளில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எண்ணற்ற மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, மதுரை நகருக்குள் தற்போது காளவாசல் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மரங்கள் அது போன்ற ஆபத்தில் சிக்கியுள்ளது. இதில் வேம்பு, அரசு, வாகை உள்ளிட்ட பெரும்பாலான மரங்கள் 60-70 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்டவை. இந்தப் பகுதியில் ஏற்படும் புகைமாசுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் திகழ்பவை' என்றார்.

மரம் மதுரை என்ற சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கூறுகையில், 'வளர்ச்சி எனும் பெயரில் அரசாங்கமே மரங்களை வெட்டி தூய்மைக்கேட்டிற்கு வித்திடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த சில ஆண்டுகளாக மதுரையின் சராசரி வெப்ப அளவு 40-லிருந்து 42 டிகிரி வரை கூடியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் மரங்களின் அழிக்கப்பட்டதுதான்.

மரங்கள் நட்டு வளர்ப்பது மாற்றுத் தீர்வு என்றாலும், இருக்கின்ற மரங்களைக் காப்பாற்றுவது மிகவும் இன்றியமையாதது. இதற்காக களத்திலிறங்கி பொதுமக்களும், இளைஞர்களும் போராட முன் வர வேண்டும். வெறுமனே முகநூல் பக்கத்தில் கருத்துச் சொல்வதோடு நின்றுவிடக்கூடாது. மக்கள் திரண்டு வந்து நின்றால்தான் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு பயம் ஏற்படும். ஆகையால் ஒன்றுபட்டு இந்தப் பேரழிவைத் தடுக்க அனைவரும் முன் வர வேண்டும்' என்றார்.

மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் நெடுஞ்செழியன் கூறுகையில், 'காற்று மாசு மிகுந்த நகரங்களுள் மதுரையும் ஒன்று என தமிழக அரசே அறிவித்துள்ளது. ஆனால் அதனை தரம் உயர்த்துவதற்கு மாறாக, பாலம் கட்டுவதற்காக மரங்களை அரசே வெட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? இந்தப் பகுதிகளில் வாழும் மக்களை இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது அரசின் நோக்கமா..? திட்டத்திற்கான வரைவறிக்கையை வெறும் வரவு-செலவு கொண்டு மட்டும் அளவிடுவது சரியான அளவுகோலல்ல. அதன் சூழல் உள்ளிட்ட பிற விசயங்களையும் கணக்கில் கொள்வதும் அவசியம்.

அதேபோன்று ஒரு திட்டத்தைச் செயல்படுத்த சூழல் சார்ந்த கருத்தியலாளர்கள், அறிவியலாளர்கள், சுகாதாரத்துறை, மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவின் பரிந்துரை மிகவும் அவசியம் என்பதை தமிழக அரசு நடைமுறையாகக் கொண்டு வர வேண்டும்' என்றார்.

(இதற்குரிய வீடியோவை TN_MDU_01_19_KALAVASAL_TREE_CUT_VISUAL_BYTES_9025391 என்ற பெயரில் மோஜோ மூலமாக இன்று இரவு 11.15 மணியளவில் அனுப்பியுள்ளேன்)
Conclusion:
Last Updated : Jun 20, 2019, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.