ETV Bharat / state

ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்புவதில் பகை; இளைஞர் கொலை - 6 பேர் கைது - Madurai News

மதுரை அருகே ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் ஒருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த நிலையில்,அக்கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 15, 2022, 8:49 PM IST

மதுரை: திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் என்பவரது மகன் பாரதிராஜா(35). இவரது மனைவி முகிலா. இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பாரதிராஜாவிற்கும் அதே ஊரைச்சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்புவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாரதிராஜா தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்குத் தொடர்பாக, போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அவர் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்று டி.புதுப்பட்டிக்கு திரும்பியுள்ளார்.

புதுப்பட்டியில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று (நவ.14) தனது நண்பர் சரவணக்குமார் உடன் பேசிக்கொண்டிருந்தபோது, அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் காரிலிருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பாரதிராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் முகம், மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்ட பாரதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாரதிராஜா உடன் பேசிக்கொண்டிருந்த சரவணக்குமாரையும் வெட்டியதில் அவரும் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சரவணக்குமாரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சரவணக்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர்.

மேலும், இறந்த பாரதிராஜாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பினர். தொடர்ந்து, தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் பாரதிராஜாவை கொலை செய்தது திருநகரைச் சேர்ந்த சந்தனபாண்டி, புதுப்பட்டியைச் சேர்ந்த கோகுல், விக்கி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் எனத் தெரியவந்தது.

திருமங்கலம் போலீசார் விசாரணை
திருமங்கலம் போலீசார் விசாரணை

இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி வசந்த குமார் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய கும்பலை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த 6 பேரையும் இன்று சுற்றிவளைத்து பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: லிவிங் டூ கெதர் பயங்கரம்: காதலியின் பாகங்களை மீட்க காட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.