சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டையைச் சேர்ந்தவர் தேவி. இவர் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியுள்ளார். கடந்த மாதம் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட அதே நாளில் பிரியதர்ஷினி என்பவருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளாதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசியல் தலையீடு உள்ளதாகவும் தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னதாக, சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு