மதுரையில் இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கபூருக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறால் புறப்பாடு தாமதமானது. இதில் பயணம் செய்யவிருந்த 163 பயணிகளில் 90 வயது முதியவர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலை உணவாக இரண்டு இட்லி, வடை மட்டுமே கொடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து பிற்பகல் மூன்று மணியளவில் சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. நேற்று இரவு புறப்பட வேண்டிய விமானம் 15 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.