ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது; சிபிஐ எதிர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு சிபிஐ சார்பில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் இவருக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது சிபிஐ எதிர்ப்பு   SI Raghu Ganesh who was arrested in Sathankulam father-son murder case has filed petition seeking bail

author img

By

Published : Apr 9, 2022, 3:28 PM IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உட்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம்.

இந்த வழக்கில் உள்ள 105 சாட்சிகளில் 22 பேரை மட்டுமே இதுவரை விசாரித்து உள்ளனர். 20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றக்காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுவேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு
ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று (ஏப்ரல்.8) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில், 'காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களைக் காப்பாற்றவே, நாடு முழுவதும் நிம்மதியாக இரவு பொதுமக்கள் தூங்குவதற்குக் காரணம் காவல்துறையினர். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை 2 நபர்கள் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மேலும் மனுதாரர் ரகு கணேஷ் இதுபோன்ற குற்றங்களில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளார். கரோனா காலகட்டம் இருந்ததால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் இவருக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் உத்தரவிற்காகத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: தேனியில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் - ஹென்றி திபேன் பேட்டி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.