மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10 வயதிற்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாகக் கடைக்குள் இழுத்துச் சென்று, மிட்டாய் கொடுத்து, சரவண குமார் தன்பால் சேர்க்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் அளித்தப் புகாரின் பேரில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர் சரவண குமாரை கைது செய்து போஸ்கோ சட்டத்தின்கீழ், சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போடியில் பேராசிரியர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்