ETV Bharat / state

புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து - மத்திய இணையமைச்சர் தகவல்! - புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் வரை கப்பல் போக்குவரத்து

மதுரை : புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே முதற்கட்டமாக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Shipping will commence from Puducherry to Jaffna soon
புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது!
author img

By

Published : Feb 18, 2020, 10:28 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ''மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் எனக்கு மனநிறைவைத் தந்தது. தற்போது, முதற்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்.

Shipping will commence from Puducherry to Jaffna soon
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த மத்திய இணையமைச்சர்.

அதன்பின்னர் இலங்கை அரசோடு கலந்தாலோசித்து, தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கும் கப்பல் போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும்'' என்றார்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். முன்னதாக, ராமேஸ்வரம் தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில், 7 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள புதிய கலங்கரை விளக்கத்திற்கு அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிங்க : நக்சலைட்கள் ஆயுத பயிற்சி வழக்கு - தமிழ்நாடு முன்னாள் உள்துறை கூடுதல் செயலர் ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.