மதுரை: நேற்று (ஆகஸ்ட் 27) நிழலில்லா நாள் வானிலை நிகழ்வு நடைபெற்றது. நேற்று காலையிலிருந்தே மதுரை மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக இருந்ததால் சூரியனைக் காண முடியாத நிலை தொடர்ந்திருந்தது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சரியாகப் பிற்பகல் 12.19 மணிக்கு நிழலில்லா அறிவியல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் கிடைத்த சூரிய ஒளியைக் கொண்டு அறிவியல் ஆய்வாளர் லெனின், தமிழ்க்கோவன் தலைமையில் மாணவர்களுக்குச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிழலில்லா நாள்
ஆண்டுதோறும் இரண்டு நாள்களில் மட்டும் மதிய நேரத்தில் நிழலைப் பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் விழும். இதுதான் நிழலில்லா நாள் என அழைக்கப்படுகிறது. இந்த நிழலில்லா நாள் ஆண்டுதோறும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.
நிழலில்லா நாள் தோன்றும் நேரம்
இது குறித்து, ஆய்வாளர்கள் லெனின், தமிழ்க்கோவன் ஆகியோர் பேசுகையில், ”ஒரு சில நொடிகள் மட்டும் தென்பட்ட இந்த நிகழ்வின்போது மாணவர்கள் வட்ட வடிவில் கைகோத்தபடி நின்ற நிலையில் நிழலில்லாமல் காணப்பட்டது.